Archive

Archive for the ‘1’ Category

புலத்தில் 17/04/2010இல் இடம்பெற்ற மரணம் (கொலை) தொடர்பான முக்கிய அறிவித்தல்

April 20, 2010 Leave a comment

இத்தாலி தேசத்தில், பிஸ்தோயா (Lamporecchio(Pistoia)- Italy.) என்னும் இடத்தில் வாழ்ந்த “இராமன் விஜயலக்ஸ்மி” என்னும் 36 வயதுடைய கிளிநோச்சியை பிறப்பிடமாகக் கொண்ட  பெண் 17/04/2010 வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு மரணமடைந்துள்ளார் என இத்தாலிய காவல் மற்றும் இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பெண்தொடர்பான மேலதிக  காரியங்களை மேற்கொள்வதற்கு அதாவது, மரணவீட்டுக் காரியங்களை நடாத்துவதற்கு உரித்துடையவர்கள், அல்லது, இப்பெண்ணுடைய உறவினர்களின் தகவல் தெரிந்தவர்கள் அவர்களுக்கு இச்செய்தியினை அறிவித்து எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.  அல்லது, நேரடியாக இத்தாலியில் உள்ள இலங்கைத்தூதராலயத்துடன் அணுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

இத்தாலியில் உள்ள இலங்கைத்தூதராலயத்தின் வேண்டுகோளுக்கிணங்க

UNGA “ஒருங்கிணைந்த புதிய தலைமுறை ஒன்றியம்” 
இத்தாலிய பணிமனை
மக்கள் சேவைப்பிரிவு
இத்தாலி  -TP+39 3346708523 / +39 3204031624 (Mrs.Shana)
Mail – arugan@hotmail.it

(இதனை அனைத்து இணையங்களும் பாரபட்சமின்றி வெளியிட்டு உறவினர்களை தொடர்பு கொள்ள ஆவண செய்யவும். )

Categories: 1

ஆழுமை இல்லாத இடத்தில் அதிகாரம் இருப்பது பொருந்தாது

April 19, 2010 Leave a comment

Sampanthan--hakeem அரசனை நம்பி புருசனைக்கைவிட்டமாதிரி இருக்கின்றது கூட்டமைப்பினரின் செயல். மேலும் மீசையில மண்ஒட்டாதது மாதிரி “மக்களாணை” … மக்களாணை என்கின்றார்களே, 22 பாராளுமன்ற உறுப்பினர்களை விட 13 பாராளமன்ற உறுப்பினர் அதிகமோ????
இராஜதந்திரமற்ற கூட்டமைப்பினர், எதிரியின்கையைக் குலுக்காமல் , துரோகியின்  காலில் விழாசென்றார்கள். ஆனால் பேச்சு நடத்து தயாராகும் கூட்டமைப்பினருக்கு ஒரு தகவலை  “ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒரு தடவை கையைச் சுட்டுக்கொண்டவன் நான். இன்னொரு தடவை அப்படிச் செய்வதற்கு நானொரு முட்டாள் அல்ல வெனத் தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மைச் சமூகத்தை விலைபேசும் துரோகத்தனத்தை ஒருபோதும் செய்யமாட்டேன் எனவும் உறுதிபடக் கூறியுள்ளார். “ தெரிவித்திருக்கும் இந்த கட்சித்தலைவரின் வார்த்தையில் அடையாளம் காட்டப்பட்ட பகுதியை கூட்டமைப்பினர் நன்கு உணரவேண்டும். பிரபாவுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு, கடைசிவரை அரசுடன் மற்றும் எதிர்க்கட்சியுடன் இணைந்திருந்தவர்கள் இப்போது எது செய்தாலும் என்ன கிடைக்கப்போகின்றது. கூட்டமைப்பினருக்கு இன்னும் அறிவு தெளியவில்லை… விரைவில் கூட்டமைப்பின் தலைமை மாற்றப்படவேண்டும். அப்போதுதான் தகுதியான அறிவுகள் செயற்படும். "ஆழுமை இல்லாத இடத்தில் அதிகாரம் இருப்பது பொருந்தாது."

Categories: 1

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -4) – Arugan (18/04/2010)

April 19, 2010 Leave a comment
Categories: 1

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றிவிட்டார்கள் Nanri – arugan.com

April 13, 2010 Leave a comment

4510012714416205 திறனும், முயற்சியும், ஆர்வமும் இருப்போரை நிரந்தர மேலுலகிற்கு அனுப்பிய பிரபாகரனிலும் பார்க்க, அதே திறனும்,  முயற்சியும், ஆர்வமும் இருப்போர்களுக்கு தகுந்த தகுதியை வழங்கும் மகிந்த எவ்வளவோ மேல். அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றிவிட்டார்கள் ஒரு சில பணபலமுடைய தமிழர்கள். இதனால் பப்பாமரம் முறிவடையும் என்றுகூட எண்ணாமல் பப்பாவின் உச்சிக்கே போய்விட்டார் அவர் அதனால் அவர் உச்சியே சிதைவடைந்து போய்விட்டது. ஆனால் மகிந்த எத்தனையோ நல்லகாரியத்தை தமிழர்களுக்கும் நாட்டுநலனுக்கும் மேற்கொண்டிருந்த போதிலும் அதனை பாராட்டவோ செய்தியாக வெளியிடவோ அதே தமிழ் மக்கள் விரும்பவேயில்லை.

Read more…

Categories: 1

பிரபாகரனுடைய போராட்ட அனுபவத்திலும் பார்க்க மகிந்தவுடைய அரசியல் மற்றும் வரலாற்று அனுபவம் அதிகம்…!!!! Nanri arugan.com

April 9, 2010 Leave a comment

இலங்கையில்  2010ன் பாராளுமன்றத் தேர்தலும், தமிழர்களின் (கட்சிகளின்) எதிர்காலமும்…

prabha_in_india  பிரபாகரனின் ஆயுதபலத்தால் மட்டும்  தமிழீழ வல்லரசை அமைத்துவிடலாம், அதிலும் கண்மூடித்திறக்கும் போது ஈழம் மலர்ந்து விடும் என்று பிரச்சாரங்களும் பலருடைய போக்குகளும் நடந்த காலம் இன்னும் கண்முன்நின்று அகலவில்லை!!!

இயேசு “அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார். 42. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; 43. மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். 44. அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.(மாற்கு 6:41-44) என்றால் அதன் உள் அர்த்தத்தையும் உண்மையினையும் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மக்கள் இருக்கும்வரையில் எதுகும் மாறப்போவதில்லை!!!
அதே வேதாகமத்தில் “ரோமர் 7:6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.

என்றும், “ Iபேதுரு 4:12 பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,” குறிப்பிட்டிருக்கின்றது. இதிலிருந்து எடுத்துரைக்க முயல்வது எதுவாகில்,, யாரிடம் எது கேட்டால் அது எவ்வாறு நடக்கும் என்பதனை ஓரளவிற்கேனும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

leaders_swiss-meeting3-300x144 அதாவது, சிங்களவர்கள் பெரும் பகுதியானவர்களாக இருந்த போதிலும், வீதாசாரத்தில் பார்க்கும் போது, சிங்கள கட்சிகளிலும் பார்க்க தமிழ் கட்சிகள் மிக அதிகமாகவே காணப்படுகின்றது. கடந்த காலத்தில் தமிழ் கட்சிகளில் தலைவர்கள் இரகசியம் இரகசியமாக ஒரு வெளிநாட்டு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள் அதன் விளைவு மேலும் தமிழர்களை சின்னாபின்னமாக்கியது. இதில் அரசியல் தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள்போல், டக்ளசும், கருணாவும் பங்கு பெறவேயில்லை… அதற்கு புலிகளின் ஆதரவாளர்களால் தமக்கு ஏதாவது ஆபத்துவரலாம் என்ற ஐயப்பாட்டை மக்களுக்கு வெளியிட்டாலும் அது எத்தனை தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் பார்க்க வேண்டும். குhரணம் அவர்கள் அக்காலத்தில் இலங்கை அமைச்சர்களாக இருந்ததால் சர்வதேச அரசு பார்காப்பு வழங்கியிருக்கும் என்பதும், அதில் ஏதும் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் புலிகளுக்கான பின்னடைவு புலத்தில் மேலும் அதிகரிக்குமேயொழிய, அதன்மூலம் எந்த சிக்கலும் தீர்ந்திருக்காது என்பதனையும் புரிற்து கொள்ளவேண்டும்.

Read more…

Categories: 1

தேர்தல் முடிவுகள் – 2010

April 9, 2010 Leave a comment
Categories: 1

புலிகளின் தலைவர்கள் தாடர்பாக எழுதும் அருகனின் தகவல்களை உறுதிப்படுத்தும் பிரபல்ய இணையங்கள். Nanri arugan

April 9, 2010 Leave a comment

6ம் திகதி ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் பல தடவைகள் அருகன் தளத்தில், புலிகளின் கடந்த காலத்தில் நடந்த துன்பவியல் சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட நிலைதொடர்பாக வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக பலர் வினாக்களை எழுப்பியிருந்தனர். அதன்  விளைவு பல இணையங்களில் தற்போது வெளிவருகின்றன.உதாரணம் அதிர்வு இணையம் பெரும்பான்மை மக்களால்

image

பார்க்கப்படுகின்ற தளத்தில் ஒன்று என்பது உண்மையே, அவ்வாறான தளத்தில் இது தொடர்பான தகவல்கள் கசிவது, அருகனின் தளத்தில் வெளிவருகின்ற தகவல்களை ஊர்ஜிதப்படுத்துகின்றதாக இஅருக்கின்றது. இதைக்கவனியுங்கள்….

“குறிப்பாகச் சொல்லப் போனால், இராணுவத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் பல மூத்த தளபதிகள் சிறையில் உயிருடன் இருக்கின்றனர், சிலர் காடுகளில் மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்பதே உண்மையாகும்.” xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx 

Read more…

Categories: 1

இந்தியா சீனா போன்ற நாடுகளை இப்போராட்டத்தின்போக்கை மாற்ற எத்தணித்துள்ளது என்றால்

April 3, 2010 Leave a comment

 4239627277_9a53685aec சமாதானம் நோக்கிய பேச்சுக்களில் பங்காற்றிய குழுவின் தமிழராக இண்றும் இலங்கையில் இருக்கும் அம்மான்…

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினை வென்றெடுக்க தேர்தலே தகுந்த பரிட்சை-அருகன்.
எதுவாகிலும் இன்று இலங்கை என்ற தாய்நாட்டுக்குள் ஒன்றுபட்ட நிலையில் உயிர்சேதமின்றி அனைவரும் சமமாக வாழக்கூடிய வழியினை இன்றைய அரசு தலைவர் பெற்றுத்தந்திருக்கின்றார். கடந்த முப்பது வருடங்களில் இடம்பெறாத மனிதாபிமான நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இதற்குக்காரணம் யார்?… முன்பு இதற்கு மாறாக கேடுகெட்ட நிலையில் எமது தேசம் சென்றமைக்குக்காரணம்தான் யார்???

Read more…

Categories: 1

புலிகள் ஒருபோதுமே ஜனநாயகத்தை ஏற்கவில்லை, ஆனால் நாடுகடந்த அரசு என்ற செயற்பாட்டாளர்களோ இலங்கையில் தமது ஜனநாயகத்தை ஏற்கவில்லை-புலத்தான் – Nanri Ammaan.net

March 25, 2010 Leave a comment

prabha_in_india கடந்த காலங்களில் அமைச்சரும் முன்னாள் புலிகளின் முக்கிய தளபதியுமான கருணா அம்மானை பல இணையத்தளங்கள் வசைபாடிவந்ததை மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் தற்போது அவ்வாறான இணையத்தளங்களில் பல செயலிழந்து போயிருக்கின்ற நிலையில், இன்னும் ஒருசில அவ்வப்போது விழித்துக்கொள்வதனைப்போல் செயற்பட்டாலும் கருணா அம்மானை எவ்வாறு வசைபாடுவது என்று தெரியாமல், அவர் சொல்லும் வார்த்தைகளை பொறுக்கி எடுத்து அதை நக்கலாகவும் கிண்டலாகவும் ஏழனம் செய்கின்ற வகையிலிருந்து இப்போது மெதுவாக மாறி தகிட தகிட தாளம் போட முனைவதும் புரிகின்றது. அம்மான் அன்றாடம் பல்வேறு செயல்திட்டங்களை மேற்கொண்டாலும் அவற்றை வெளியிடாது, அவர் அப்படிச் சொன்னாராம், இப்படிச்சொன்னாராம் என்று எழுதுகின்றார்கள். அவருடைய வாயால் ஒருவருடைய பெயரை உச்சரித்தால் அந்த ஒருவரை பிரபல்யப்படுத்திவிடலாம் என்றோ அல்லது அவர் VIP ஆகிவிடுவார் என்றோ தற்போது எண்ணிக் கொள்கின்றார்கள்… இணையத்தள அமைப்பாளர்கள். இப்பொதுதெல்லாம் வாரத்தில் இருமறை என்றாலும் அம்மானைப்பற்றி ஏதாவது எழுதி வருகின்றபோதிலும், அவரை மக்கள் மத்தியில் இருந்து ஒதுக்கப்பார்ப்பதிலேயே கண்ணும் கருத்துமான வார்த்தைப்பிரயோகங்களை அழுத்தமாகப்பாவிப்பது எழுத்துத்திறமையினைக் காட்டினாலும் அது நிலைத்திருக்க முடியாது என்பது சிறந்த அறிஞர்களுக்குப்புலப்படும்.

Read more…

Categories: 1

நாடுகடந்த தமிழீழம். – நாடுகடத்தப்பட்ட தமிழீழம் (3) Nanri Thesiyam

March 25, 2010 Leave a comment
புலிகளின் தலைவர் கட்டிக்காத்த கூட்டினை “பயம்” என்ற கட்டுக்கோப்பை…

 Sellvaமுக்கியமான ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை செல்வா றே;கொண்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத்தூக்கிப் பிடிப்போர்கள் ஏன் அவர் மேற்கொண்ட அதே வழியில் செல்வோரை புறந்தள்ளுகின்றனர் என்று புரியவில்லை!!!

தந்தை செல்வா திழீழம் தேவை என்றாரே ஒழிய தனிமையாகவுமில்லை தனிமைப்படவும் இல்லை!!! எமது தேசமாகிய இலங்கைத்தீவை சிங்கள அரசிடம் ஒப்படைத்து விட்டு இப்போது தேசத்தை விட்டு தேசங்கடந்து எமது கோரிக்கையினை நடத்துவது தகுந்த செயலாகத்தெரியவில்லை எமது போராட்டம் அடிப்படை எமது தேசத்திலேயே இருக்க வேண்டும் மாற்று செயற்பாடுகள் மட்டுமே புலத்தில் அனுசரணையாக அமையவேண்டும். ஆனால் இன்று நடப்பதென்ன???

Read more…

Categories: 1
Follow

Get every new post delivered to your Inbox.